வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டத்தில்

351

 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டத்தில்
01e9c4e1-c8bf-47cb-b433-f992840aff14 3a39fddb-fb0a-4255-80bd-12bd76ed50bd 4fa90623-c9d8-4fa6-b6f9-59c60a920aca 6bbc45ff-17dd-4b6b-a47c-0587c6f6aeeb 80cb0e15-978c-4dc5-a913-e317e44f04cf 0166ff02-6975-4284-9731-c8567252e5d7 567c8302-4504-4a56-9733-abac21c76f22 617dbd6c-a32a-498e-91af-fd8c7af3d181
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 147 பயனாளிகளுக்கான ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ஆயிரம் பெறுமதியான (50,000/-) உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு 11-12-2015 வெள்ளி மாலை 2:30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வினை முல்லைத்தீவு மாவட்ட எழுத்தாளர் யோ.புரட்சி அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார்.
இன் நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தை அவர்களும்  வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் து.ரவிகரன்  மற்றும் க.சிவநேசன் ஆகியோரும் முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.மோகன்ராஸ் அவர்களும்,  வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் மவ்வட செயலகத்தின் திட்ட பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தனர்.
SHARE