வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

149

 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை (04.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
ஆளுநர் மற்றும் துணைத்தூதுவர் இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு வடக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். புதிய ஆண்டில் இந்திய அரசாங்கத்திடமிருந்து எவ்வாறான உதவிகள் தேவை என்பது தொடர்பில் துணைத்தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டார்.
SHARE