இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள வைத்தியத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் திணைக்கள உயர்திகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் ஆற்றலுள்ள துறைசார் முதியோர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இங்குஉரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், முதியவர் தினத்தில் முதியவர் ஒருவரை முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள அழைத்தமைக்கு நன்றி.
சர்வதேச அளவில் முதியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் ஐ.நா மன்றால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதியவர்களின் கவலைக்குரியதாக இருக்கின்றது. பல இடங்களில் அவர்கள் ஆதரவற்று இருக்கின்றார்கள்.
முன்பிருந்த கூட்டுக்குடும்ப வாழ்வியல் இன்றில்லை. அது மலையேறிவிட்டது. அந்த வாழ்க்கை அமைப்பில் முதியவர்களுக்கு ஆதரவும் ஒத்ததாசையும் இருந்தது.
இன்று முதியவர்கள் தங்கள் தனிமையை போக்க முதியோர் இல்லங்களை நாடவேண்டியேற்பட்டுள்ளது. அங்கிருப்பவர்கள் பலர் உழைத்து வாழ்வில் தேய்ந்தவர்கள்.
நல்ல பதவிகளில் இருப்பவர்கள். அறிவாளிகள். எனவே முதியவர்கள் தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் அவசியம் என தனது உரையில் தெரிவித்திருந்தார்.