வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் முதலாவது தடவையாக நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு அதனூடாக ஒரு அதிகார சபையை அதிகாரத்தோடு அங்குரார்ப்பணம் செய்து சாதித்துக்காட்டிய அமைச்சர் டெனிஸ்வன்

307

 

வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் முதலாவது தடவையாக நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு அதனூடாக ஒரு அதிகார சபையை அதிகாரத்தோடு அங்குரார்ப்பணம் செய்து சாதித்துக்காட்டிய அமைச்சர் டெனிஸ்வரனை பாராட்டுகின்றேன் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச்சட்டத்தினூடாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு 19-10-2016 புதன் கிழமை காலை 11:00 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கினார் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாவட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இ.ஆனோல்ட், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், அ.பரம்சோதி, வே.சிவயோகன், சி.அகிலாதாஸ், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராஜா ஆகியோரும் யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், முதலமைச்சர் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்கள பணிப்பாளர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஐந்து மாவட்டங்களதும் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர் இவ்வாறு கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளை வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் இணையத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இந்த அதிகாரசபையை உருவாக்க இதுவரை தம்மோடு ஒத்துழைத்த அனைவருக்கும் தனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு, இந்த அதிகாரசபை வடக்கு மக்களது போக்குவரத்தை பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாக வழங்கவேண்டும் என்பதே தமது ஒரே இலக்கு என்றும், அந்தவகையிலே இதன் உறுப்பினர்களாகிய அனைவரும் எமது போக்குவரத்து அதிகார சபையை ஏனைய மாகாணங்கள் திரும்பிப்பார்க்கும் வண்ணமாக மிகவும் சிறப்பான ஒரு அதிகார சபையாக வழிநடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, இவ் அதிகாரசபையை உருவாக்கியுள்ளதனால் வடக்கில் ஏறத்தாழ சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் முதலாவதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினர்கள் 11 பேருக்கான நியமனம் வழங்கப்பட்டது அந்தவகையிலே உறுப்பினர்களாக சி.சத்தியசீலன் செயலாளர் போக்குவரத்து அமைச்சு, அதிகார சபையின் தலைவராக அ.நிக்கொலஸ்ப்பிள்ளை ஓய்வுபெற்ற அரச அதிபர், பொ.குகநாதன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கு.பிரபாகரமூர்த்தி ஆணையாளர் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சி.சிவபரன் தலைவர் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், ம.இரவீந்திரன் குரூஸ் இயந்திர பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம், ப.மொகமட் இவ்திகார் இயக்குனர் (நடவடிக்கை ) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இ.கயஸ் பெல்டானோ சட்ட வழக்கறிஞர்/ சட்டத்தரணி மன்னார், ப.ஜெயராஜா கணக்காளர் முதலமைச்சரின் அமைச்சு, உப்பாலி கிரிவத்துடுவ பிரதம பிராந்திய முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை, வி.வஜ்ஜிர இந்திரஜித் பிரதம பொலிஸ் பரிசோதகர் போக்குவரத்து பொலிஸ் பிரிவு கிளிநொச்சி ஆகியோர் சபையின் உறுப்பினர்களாக உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டதோடு அவர்களை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்கள் சார்பாக சங்க தலைவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து அதிகார சபையையும், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோக பூர்வ இலச்சினையும் அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர். denish-2denish-3denish-4denish-5denish-6denish-7denish-8denish-9denish-10denish-11denish-12denish-13

SHARE