வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன-சி.வீ.கே. சிவஞானம்

728

வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன எனவும், இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். cvk siva 479 அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை உரிய அமைச்சு, திணைக்களங்களுக்கு அனுப்பப்படும். அவைகுறித்து உரிய பதிலளிக்க ஒருவாரகால அவகாசத்தை வழங்கமுடியும். மேலதிக கால அவகாசம் தேவைப்பட்டால் அது குறித்து சபைக்கு அறிவித்து காலத்தை நீடிக்கமுடியும். இந்த ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, அமைச்சுகளின் செயலாளர்களும், திணைக்களத் தலைவர்களும் பெயற்படவேண்டும். இவைகுறித்து முதலமைச்சர் கருத்தில் கொண்டு, ஒழுங்கு முறைகளை பிற்பற்ற பணிக்கும்படி கோரப்படுகிறது

SHARE