வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும்

318

 

வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும் நிறைவுபெற்றது… வடக்கு போக்குவரத்து அமைச்சர் தலைமையில்…

10422589_10206491329471146_1347792514498703160_n 11059246_10206491336231315_5977388988727610886_n 11164825_10206491333391244_2246766062696090557_n 11249222_10206491329631150_4255364165061037785_n 11255786_10206491329511147_5021091963663540637_n 11257198_10206491329111137_2389852317657924746_n

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இரு தரப்பினரதும் நேர சூசிகளை 60:40 என்ற வீதாசார அடிப்படையில் புதிதாக தயாரித்து போக்குவரத்தில் ஒரு ஒழுங்குத்தன்மையை பேணும் நோக்கோடு கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதலாவது ஒன்றுகூடல் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று 09 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 07-05-2015 காலை யாழ்ப்பாணத்திலும், மாலை கிளிநொச்சியிலும் நடைபெற்று தனியார், இ.போ.ச, மாவட்ட செயலகம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகள் என அனைவரையும் உள்ளடக்கியதாக யாழ்ப்பாணத்தில் 13 பேர் கொண்ட குழுவும், கிளிநொச்சியில் 09 பேர் கொண்ட குழுவுமாக அமைக்கப்பட்டது தொடர்ந்து 08-05-2015 காலை வவுனியா மாவட்டத்திலும் மாலை முல்லைத்திவு மாவட்டத்திலும் இவ்வாறு ஒன்றுகூடல்கள் இடம்பெற்று 09 பேர் அடங்கலான நேரசூசி தயாரிக்கும் குழு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, இவ் விசேட ஒன்று கூடல்களின் போது அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள் மாறும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு சத்தியசீலன், பொலிஸ் உயர் அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் ஒன்ருகூடலானது மாவட்ட செயலகங்களில் இடம்பெற்றது.

SHARE