கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதி பாலம்
20.06.2018 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண கிராமிய பாலங்கள் திட்ட மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்
நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு
யா\மண்டைதீவு றோ.க.வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டுபாலத்தின்
நினைவுக்கல்லினைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் பாலத்தினையும் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண கல்வி
பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் , மகளிர் விவகாரம்,
புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள் கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில்
முனைவோர் மேம்பாடும், மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் , வடக்கு
மாகாணசபை உறுப்பினர்களான என். விந்தன் கனகரட்ணம், கஜதீபன், ஜெயசேகரம், தீவக மறைக்கோட்ட
குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத் தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார்,
மண்டைதீவு தில்லேஸ்வரம் சிவன் கோவில் பிரதமகுரு மற்றும் வடக்கு மாகண பிரதம செயலாளர் அ. பத்திநாதன்
வேலணை பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், வேலணை பிரதேச செயலர் சோதிநாதன், வடக்கு
மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் சிவராஜலிங்கம், வடக்கு
மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் சிவநேசன்,
மற்றும் மண்டைதீவு அல்லைப்பிட்டி பொது அமைப்புக்களின் தலைவர்கள், மக்கள் என பலரும் கலந்து
சிறப்பித்திருந்தனர்.
மண்டைதீவு – அல்லைப்பிட்டி இணைப்பு வீதியில் அமைந்திருந்த இப் பாலமானது போரின்போது முற்றாக
உடைக்கப்பட்டு மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்டது. குறிப்பாக வேலணை பிரதேச செயலகத்தில் தமது
தேவைக்ளைப் பூர்த்தி செய்வதற்காக மண்டைதீவு மக்கள் நீண்ட தூரம் பயணித்தே தமது தேவைகைள்ப்
பூர்த்திசெய்யவேண்டிய நிலையில் இருந்தனர். இந்த நிலையில் தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு –
அல்லைப்பிட்டி பங்குத் தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரினதும், மண்டைதீவு –
அல்லைப்பிட்டி மக்களினதும் , யாழ் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்
அவர்களினதும் இடைவிடாத முயற்சியினால் முப்பத்து இரண்டு மில்லியனில் மண்டைதீவு – அல்லைப்பிட்டி வீதி பாலம் அமைக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 215
மில்லியனில் இணைப்பு வீதியும் புனரமைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி.
விக்னேஸ்வரன் அவர்களும் யாழ் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களும் தமது உரைகளில் குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.