வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி

341

 

வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி
Salvm

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.னேஸ்வரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர அவர் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர் இல்லை.

முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மறுக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு தமிழரசுக் கட்சிக்கு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் வட மாகாணசபை தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

ஆனால் தமிழரசுக்கட்சி என்ற பெயரை பதித்து அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரை ஒரு கட்சிக்குள் கட்டுப்படுத்தி அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் குறித்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

வடக்கு முதலமைச்சர் தொடர்பான விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பேசி தீர்ப்பதற்கு வழிவகைகளை தேடாது பகிரங்கமாக ஊடகங்களில் அறிக்கை விடுத்து தம்மை பெரியவர்களாக காட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஆகியவற்றை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் வண்மையாக கண்டித்துள்ளதாகவும்,

அண்மையில் வெளிநாட்டிற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை புலம் பெயர்ந்த தமிழர்கள் தாக்க முனைந்தது அவரின் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் என மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

SHARE