வடமாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று மாலை 7 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
வட மாகாண அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கவுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உழவர்களை கௌரப்படுத்தும் இவ்விழாவில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.