
ரோனு புயல் தற்போது காங்கேசன்துறை பிரதேசத்தின் அருகே 900 கிலோ மீட்டர் அளவில் வடக்கில் மையங்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது மேலும் நாட்டை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்றைய தினம் 100 தொடக்கம் 150 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை சுற்றிவுள்ள கடலில் காற்றின் வேகம், மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.