வடபகுதியில் யுத்தத்திற்குற்குப் பின் நிர்ணயிக்கப்பட்ட புத்தகோவில்கள் அகற்றப்படவேண்டும். இல்லையேல் தமிழ் சிங்களக் கலவரத்திற்கு இதுவே காரணமாக அமையும்..!

169


வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பௌத்த துறவிகளை சிங்கள அரசியல் தலைமைகள் ஏவி விட்டு புதிதாக புத்தர் சிலைகளை அமைப்பதிலும் அல்லது இரவோடு இராவாக புத்தர் சிலைகளை தமிழ்க் கிராமங்களில் புதைத்துவிட்டு ஆராச்சி செய்வதாகக் கூறி அதனைத் தோண்டி எடுத்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்த இடம் என்று கூறி அங்கே தமது கோவில்களைக் கட்டுவதற்கான முன்னெடுப்புக்கள் கூட பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைக்கு அண்மித்த பிரதேசத்தில் குறுந்தூர் மலை என்னும் இடத்தில் புத்தர் சிலையைக் கொண்டு வந்து வைப்பதற்கான முயற்சிகள் தென்னிலங்கை புத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட பொழுது அவை மாகானசபை உறுப்பிர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் அத்தகைய நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் முறுகல் நிலைகளும் தோற்றுவிக்கப்பட்டது.


இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தென்னிலங்கை அரசியல் வாதிகள் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பு தலைநகரில் நடாத்தியுள்ளனர். தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இனி நான் முகதாட்சனியம் காட்டப்போவதில்லை என்று கடந்த வாரம் கொழும்பில் இடம்பறெ;ற ஆர்ப்பாட்டப் பேரணியில் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்தானது இன்னொரு யுத்த சூழலை நோக்கி தமிழினத்தைக் கொண்டு செல்வதாகவே அமையப்பெறுக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்கின்ற அதே நேரம் வடக்குகிழக்கில் இவ்வாறான இனவாதத்தை தூண்டும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றமையானது வடகிழக்கில் வாழுகின்ற சிறுபாண்மை இனத்திற்கு அரசாங்கம் செய்கின்ற பாரிய தூரோகமாகவே இதனை பார்க்கமுடிகின்றது.

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மை இனத்தைப் படுகொலை செய்தார் என்பது வரலாறு கடந்த உண்மை. மீண்டும் அவருடைய அணியை ஆட்சிக்கு கொண்டு வருவதன் ஊடாக மற்றுமொரு முள்ளிவாங்கால் சம்பவம் இடம்பெற்று விடுமா? என்ற அச்சம் மக்கள் மனதில் எழுகின்றது. தென்னிலங்கையில் எழுப்பப் படுகின்ற இனவாதக் கருத்துக்கள் கடந்த கால வன்முறைகளுக்கு வித்திட்டன மைத்திரிபால சிறிசேனவினுடைய கூட்டாச்சி அரசாங்கத்தினை விழுத்தி மகிந்த ராஜபக்ஷhவினுடைய ஆட்சியைக் கொண்டு வருவதற்கு பூகோல ரீதியாக செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. மீண்டும் சர்வதேசப் பொறிமுறைக்குள் இலங்கைப் பிரச்சனை உட்படுத்தப்படுமாக இருந்தால் குறிப்பிட்ட நாடுகள் தமது லாபத்தைக் கருத்தில்க் கொண்டே செயற்படும்.

தற்பொழுது மத ரீதியாக பிரச்சனைகள் இலங்கையில் உருவெடுத்துள்ளது. இதில் முஸ்லீம்களும் தமக்கான தனி அலகை கோருகின்றனர். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் தமக்கான தனி அலகை கோருகின்ற நிலமை ஏற்படலாம். அதற்கிடையில் பௌத்தவிகாரைகள் வடக்கிழக்கில் புனரமைக்கின்ற விடையங்களும், புதிதாக அமைக்கின்ற விடையங்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகானசபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவே நீண்டகால பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். மதவாத தொடர்வான்முறைகள் மற்றுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

SHARE