இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் வடபகுதி யினைச் சேர்ந்த மக்கள் பாலியல் ரீதியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாது ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்ந்துவந்தனர். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இவ்வாறு பாலி யல் ரீதியான துஷ்பிரயோகங்களைச் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் யாரும் இந்நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதனை மீறிச் செயற்பட்டால் அதன் விளைவு பற்றி அறிந்திருந்தமையின் காரணமாக மக்கள் ஒழுக்கமுடையவர்களாக வாழ்ந்துவந்தனர். 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பாலியல் ரீதியாகவும், போதைப்பொருட்களுக்கு அடிமைக ளாகவும் இன்று வடகிழக்கிலுள்ள தமிழினம் வாழ்ந்துவருவதையிட்டு கவலைகொள்ளும் அதேநேரம் சிங்கள அரசு இதனைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகின்றது. அதாவது மீண்டும் ஒரு போராட்ட நிலை இந்த நாட்டில் ஏற்படக்கூடாது. வடகிழக்கில் வாழ்கின்ற இளம் சமுதாயத்தினரை பாலியல் அடிமைகளாக்குவதன் மூலம் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைப் போல இலங்கையையும் மாற்றிவிட்டால் போராட்டத்தைப் பற்றி திரும்பிப்பார்க்கமாட்டார்கள் என்பதுதான் அவர்களின் நோக்கம். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலுள்ள பாலியல் தொழில் புரியும் பெண்கள் இங்கு அழைத்துவரப்பட்டு மசாஜ் நிலையங்கள் என்கின்ற பெயரில் பாலியல் ரீதியான தொழில்கள் இடம் பெற்றுவருகின்றது.
அண்மைக்காலமாக இந்த பாலியல் ரீதியான தொழில் இடங்கள் பொலி சாரினால் முற்றுகையிடப்பட்டு அதில் பணிபுரிந்த ஒருசிலர் கைது செய்யப்பட்டு மிருக்கின்றார்கள். இளம் வயதுடையோரை போதைப் பொருட்களுக்கு அடிமைப் படுத்துவதன் ஊடாக, அவர்கள் தாமாகவே பாலி யல் ரீதியான தூண்டுதலின் மூலம் இவ்வகையான பிரதேசங்களுக்குச் சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத் தூண்டப்படுகின்றார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் பாலியல் வியாபாரத்திற்காக மும்பாய் என்ற இடம் தெரிவுசெய்யப்பட்டு அங்கே கசினோ விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன் தமது நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமாகவே அதனை அவர்கள் உருவாக்கிவைத்துள்ளனர். தாய்லாந்தினைப் பொறுத்தவரை அந்த நாடு பாலியல் ரீதியான தொழில்களிலேயே தங்கி யுள்ளது. அந்நாட்டின் பிரதான வருமானம் இத்தொழிலே. அரபு இராச்சியங்களைத் தவிர பெரும்பாலான மேற்கத்தேய நாடுகளில் இந்த நடவடிக்கைகள் சாதாரணமான தொழிலாக நடைபெற்று வருகின்றது. ஐரோப்பிய நாடுகளைப்பொறுத்தவரை பாட சாலை மாணவ, மாணவிகள் கூட கட்டாயமாக பாதுகாப்பான உறவி னைப் பேணுவதற்காக பாலியல் ரீதி யான அங்கிகளைக்கொண்டுசெல்ல வேண்டும் என்பது பெற்றோர்களாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையிலுள்ளது. மேற் கத்கேய நாடுகளின் கலாசாரம் வேறு. எமது கலாசாரம் வேறு. எனவே மேற்கத்கேய நாடுக ளின் கலாசாரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் யுத்தம் ஏற்படாவண்ணம் தடுக்கமுடியும் என்பதேயாகும்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை அங்கு இன்று சாதாரணமாக விபச்சார விடுதிகள், மசாஜ் நிலையங்கள் என வெளிப்படையாக இயங்கிவருகின்றன. ஒரு காலத்தில் வடபுலத்தில் எய்ட்ஸ் என்ற நோய் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இங்கு சிலருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. போராட்ட ரீதி யாக தமிழினத்தை வென்றுவிட்டோம் எனக்கூறிவருகிறது அரசு. வலுக் கட்டாயமாக மறைமுகமாக இராணுவம் மற்றும் பொலிசாரி னால் பாலியல் துன்புறுத் தல்களுக்கு பெண்கள் உள்ளாக் கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை 1040 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 916 முறைப்பாடுகளும், பொலிஸா ருக்கு 124 முறைப்பாடுகளும் அறிக்கை யிடப்பட்டுள்ளன.
இதற்கமைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2010ல் 127, 2011ல் 165, 2012ல் 17, 2013ல் 340, 2014ல் 267 முறைப்பாடுகள் என மொத்தமாக 916 முறைப்பாடுகளும், பொலிஸாருக்கு 2010ல் 17, 2011ல் 11, 2012ல் 18, 2013ல் 46, 2014இல் 32 என மொத்தமாக 124 முறைப்பாடுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இதேவேளை, 2010முதல் 2014வரை 370 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என தேசிய மகளிர் குழுவுக்கும், பொலிஸூக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகளில் தேசிய மக ளிர் குழுவுக்கு 345 முறைப்பாடுகளும், பொலிஸூக்கு 25 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேசிய மக ளிர் குழுவுக்கு 2010ல் 38, 2011ல் 78, 2012ல் 93, 2013ல் 41, 2014ல் 95 என 345 முறைப்பாடுகளும் பொலிஸூக்கு 2011ல் 04, 2012ல் 04, 2013ல் 06, 2014ல் 11 என 25 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களில் குறிப்பாக வன்னியில் இருக்கும் விதவைப்பெண்கள், வறுமைக்கோட்டின் கீழ்வாழும் பெண்கள் இராணுவத்தினரால் உள்வாங்கப்பட்டு பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குடும்ப வறுமையின் காரணமாக சில பெண்கள் தாமாகவே பாலியல் ரீதியான தொழில்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு யுத்த காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் சிங்கள அரச படைகளினால் பாலியல் ரீதியாக திட்டமிட்டே துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்றமை உரிய ஆதாரங்களின் மூலம் நிரூபண மாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அப்போது இவ்வாறான சம்பவங்கள் வட பகுதியில் பரவலாக இடம்பெற்றிருக்கின்றது. தமிழ் சமுதாயத்தை அவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மாற்றியிருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த பல பெண் போராளிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் மனதை உருக்கும் காட்சிகளாகப் பதிவாகியுள்ளன. இன்று வடபகுதியிலுள்ளவர்கள் அண்மைய காலங்களாக கலாசார ரீதியாக மாற்றம் கண்டு வருகின்றனர். மேற்கத்தேய ஆடைகளை அணி வதன் ஊடாக பாலியல் ரீதியாகத் தூண்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இதனால் தமிழ் மக்களுடைய கலாசார விழுமியங்கள் வெகுவாக அழிக்கப்படுகின்றது. இன்று வடகிழக்குப் பகுதியினைப் பாரக்கும்போது தமிழ் மக்களது கலாசாரம் எந்தளவில் இருக்கின்றது என்பது புலப்படுகின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கின்றோம் என்ற நோக்கில் மறை முகமாக இவ்வாறான சம்பவங்கள் சிங்கள அரசினால் வடகிழக்கில் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது. எனினும் இதனை அறிந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கண்டும் காணாததைப்போன்ற நிலைப் பாட்டைக் கொண்டிருப்பதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாளைய இளம் சமுதாயத்தினர் பாலி யல் வன்முறைகளுக்குச் செல்லும் அளவிற்கு வடபகுதிச் சூழல்கள் வெகு வாக மாற்றம்பெற்றுவருவதைக் காணலாம். விடுதிகளை அமைப்பதன் ஊடாக யாழ் மாவட்டம் அழகுபடுத்தப்படுகின்றது என்று நினைக்கிறார்கள். மாறாக ஆபத்தினை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகாமல் இருந்த வடபகுதி இன்று இத்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது எவ்வாறு? திட்டமிடப்பட்ட பாலியல் ரீதி யான கொலைச் சம்பவங்கள், யுத்தத்தின் பின்னர் வித்தியா உட்பட 17 ஆக பதிவாகியிருககின்றது. அச்சம்பவங்கள் நடைபெற்றபோது மாத்திரமே எதிர்ப்பலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழும். ஒருசில அரசியல்வாதிகள் தமது அரசி யல் நலனுக்காக அதனைப் பயன் படுத்திக்கொள்வார்கள். அவ்வாறே அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களையும் உதாரணங்களாக எடுத்துக்காட்டலாம்.
பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து வித்தியாவின் படு கொலை சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்ததுமான செயற்பாடுகள் ஒருசிலரினால் அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று வித்தியாவின் வீட்டினைச்சென்று பார்க்கும் அரசியல்வாதிகள் எத்தனைபேர் உளர். தமது சுயநலத்திற்காக அரசியலை மேற்கொண்டுவரும் இவர்கள் தமிழ் மக்களை பாலியல் அடிமைகளாக்க இவ்வாறான அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது. சிங்கள அரசிற்கு அடிவருடிக ளாக தமிழ் அரசியல்வாதிகளும் செயற்படுகின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஆரம்ப கட்டத்திலேயே இப்பாலியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியினை வைக்க வேண்டும். இல்லையேல் வடகிழக்கு மாகாணங்கள் தாய்லாந்தினைப் போன்று பாலியல் தொழிலில் முன்னேற்றமடையும் பகுதிகளாகத் தள்ளப்படும். இதனை மனதிற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், வடமா காணசபையும் இணைந்து அரசிற்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பாலியல் தொழில் இடம்பெறும் இடங்களை இனங்கண்டு அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக் கைகளில் ஈடுபடவேண்டும். இல்லையேல் வடகிழக்கில் வாழக்கூடிய தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தொற்றுநோய் களுக்குள்ளாவதுடன் அவர்களின் வாழுங்காலத்தை இழப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
– நெற்றிப்பொறியன் –