சென்னை மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு என இலங்கையின் வடமாகாணசபையினால் திரட்டப்படும் நிதியை பெற்றுக்கொள்ளும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைதூதரகம் இல்லையென துணைதூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மழைவெள்ள பாதிப்புகளிற்காக மத்திய அரசாங்கம் எந்தவித சர்வதேச உதவியையும் கோராததாலேயே இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்கு நிவாரண உதவிகளை வழங்கவிரும்பும் எவரும் நம்பகதன்மை மிக்க அரசசார்பற்ற நிறுவனம் ஊடாக அவற்றை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தினை இந்த விடயத்திற்காக தொடர்புகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் வடமாகாண முதலமைச்சரிற்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.