வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று பெய்த கடும் மழை காரணமாக பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர்.
இதனைக்கருத்திற்கொண்டே நாளை வடமாகாண பாடசாலைகள் மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை மூடப்படும் பாடசாலைகளுக்கு பதிலாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை மறுநாள் 17ஆம் திகதியன்று இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் பாடசாலைகள் தொடர்பில் அந்தந்த பிரதேச கல்வி அதிகாரிகளின் முடிவுகளுக்கு இணங்க முடிவு எடுக்கப்படும் என்றும் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.