
வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று (திங்கட்கிழமை) மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை, வடமாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வடமாகாணசபை அமைச்சர்களின் செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையில், அவர்களை மாற்றி புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என, வடமாகாண சபையிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, வடமாகாண சபையின் அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா? அல்லது முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்களிடமுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் ஏனையவர்களுக்கும், புதியவர்களுக்கு வழங்கப்படவுள்ளதா?, அல்லது இருக்கின்ற அமைச்சர்களே வேறு, வேறு அமைச்சுப் பொறுப்புக்களுக்கு மாற்றப்படவுள்ளனரா? என்று அறியமுடியாதுள்ளது.
எனினும் இன்று மாலை வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.