இவ்வளவு நாளும் வடக்கில் அமைக்கவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் எந்த இடங்களில் அமைக்கப்படும் என்ற இழுபறி நிலை காணப்பட்டது. ஆனால் அதற்கான தீர்வை நேற்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கருத்தையும், வடமாகாண முதலமைச்சர் ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் வடமாகாண சபையில் வாக்கெடுப்பு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதற்கான தீர்வை ஜனாதிபதி தற்பொழுது வழங்கியுள்ளார்.
ஓமந்தையில் ஒரு பொருளாதார மத்திய நிலையமும், வவுனியாவில் ஒரு மத்திய நிலையமும் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.