வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகிய இருவரையும் குறிவைத்து வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றத் தீர்மானம்

221

கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கிராமிய பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ள நிலையில் ஏற்கனவே சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் வசமிருந்த இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மீளவும் தன்வசம் பெற்றுக்கொண்டுள்ளதோடு, மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். வடமாகாண சபையின் காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், அதனைக் குழப்பும் நோக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. அமைச்சர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்காக தற்போது அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் இவரது செயற்பாடுகள் அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

Vigneswaran_5

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பா? அல்லது தமிழ் மக்கள் பேரவையா? என்பதுதான் இங்கு பிரச்சினை. வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கிய சம்பந்தனும், சுமந்திரனும் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள். அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் உண்டு. வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் போன்றோரது அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. இவர்களுடைய ஊழல் மோசடிகள் என எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அமைச்சர் சத்தியலிங்கம், அமைச்சர் டெனீஸ்வரன் ஆகிய இருவருக்கெதிராக வடக்கு முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்வாராக இருந்தால், சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், வடமாகாணசபைக்கு எதிராகவும் வடக்கு முதலமைச்சர் செயற்படுகின்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்படும். வடமாகாணசபையினுடைய முதலமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் முன் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

dfhshwaran-720x480

சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாசுதேவ நாணயக்காரவினுடைய சம்பந்தியாகும். இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ள வாசுதேவ நாணயக்கார தமிழ் மக்களுடைய பிரச்சினையில் அக்கறைகாட்டுவது போன்று செயற்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக மறைமுகமாக செயற்பட்டுவரும் ஒருவர்.
அதேநேரம் கடந்த காலத்தேர்தல் பிரச்சாரத்தின்போது சாவகச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் தேசியத்தலைவர் பிரபாகரனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இழிவுபடுத்திப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தன்னையொரு சர்வாதிகாரியாகக் காட்டிக்கொள்வது ஏற்புடையது அல்ல. பாலியல் ரீதியான பிரச்சினைகளில் தொடர்புகொண்டிருந்த பிரேமானந்த சுவாமியுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த முதலமைச்சர்;, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு சுவாமியின் விடுதலைக்காகக் கடிதம் எழுதியது அம்பலமாகியது. முதலமைச்சருடைய செயற்பாடுகள் ஒரு நீதியரசராக பதவிவகித்தமைபோல அமையப்பெறவில்லை. பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளம், ஓமந்தை, வேப்பங்குளம் போன்ற பிரதேசங்களில் அமைந்தாலும் அது வவுனியாவில் அமைந்துள்ளதாகவே அர்த்தமாகும்.

Sathiyalingam

இதற்காக வடமாகாண சபையிலே உள்ளவர்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பழிவாங்குவது என்பது ‘யானை தனக்குத்தானே மண்ணைவெட்டி தன் தலையில் போட்டுக் கொண்டது போல்’ அமையும். அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. ஒரு நீதியரசராகவிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதி தவறாது செயற்படவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதுவது போன்றல்ல அரசியல். சுவாமி பிரேமானந்தாவுடன் தொடர்பைப் பேணிவந்த பொழுதே, சம்பந்தனும், சுமந்திரனும் இவரை அரசியலுக்குள் கொண்டுவரலாமா? என்பது குறித்து சிந்தித்திருக்கவேண்டும். தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீட்டும் இரகசியத் திட்;டங்கள் பல உண்டு. அத்திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்க வேண்டுமென்றே தற்போதுள்ள அரசாங்கமும் எதிர்ப்பார்க்கிறது. இதற்கு உடந்தையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவதானது தமிழ் மக்களுடைய தமிழ்த்தேசியம், சயநிர்ணயம் இரண்டிலும் கைவைத்து அதனைக் குழப்பும் ஒரு திட்டமாகவே கருதப்படுகின்றது. ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்புடன் தமது முதலமைச்சுப் பதவியினை தொடர்ந்தும் தக்கவைத்துச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அவர் செயற்படத் தவறினால் அவரது அரசியற் பயணம் ஒரு சுற்றுவட்டத்திற்குள் நிறைவுபெறும் எனலாம். சுவாமி பக்தன் என்று தன்னைக் காட்டிக்கொண்டு ‘உள்ளே மிருகம் வெளியே கடவுள்’ என்கிற ரீதியிலான செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததொன்று. தமிழ் மக்களுடைய பிரச்சினையானது இன்று தேசிய ரீதியில் தீர்க்கப்படாது இருக்கின்றது. அதற்குரிய சிந்தனையுடையவர்களாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தமது அரசியல் காய்நகர்த்தல்களை நகர்த்தவேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள்.

– சுழியோடி –

SHARE