வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் சந்தித்தார்…

387

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.   2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இவ்வேளை அவர்களை சந்தித்த வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் திரு.கஜதீபன், திரு.பரம்சோதி எதிர்க்கட்சி தலைவர் திரு.தவராசா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியதோடு, இது தொடர்பில் கௌரவ முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து பதில் வழங்குவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றும் வருகின்றது.

unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14)

 

SHARE