வடிவேலு நடிக்க இருந்த கதையில் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம்- வெளியான சுவாரஸ்ய தகவல் திரைப்படம்

157

விஜய் நடித்த காதல் படங்களில் மெகா ஹிட்டடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தில் விஜய்-சிம்ரன் ஜோடி, பாடல்கள், கதை என அம்சமாக அனைத்தும் பொருந்தியிருந்தது. இப்படம் குறித்த சில விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் எழில்.

இப்படத்தை முதலில் வடிவேலுவை நினைத்து தான் எழுதினேன். கதையும் வடிவேலுக்கு மிகவும் பிடித்துபோக நடிப்பதாக கூறி பின் தயாரிப்பாளர்களை தேடினோம். யாரும் கிடைக்கவில்லை என்பதால் நடிகர் முரளி அவர்களுக்காக கொஞ்சம் மாற்றி கதை எழுதனேன். அப்போதும் வடிவேலும் போல் முரளி அவர்களுக்கும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

பின் கிடைத்த வாய்ப்பில் நடிகர் விஜய் அவர்களிடம் இந்த கதை கூறினேன். அவர் கதைகேட்டுவிட்டு அடுத்த நாளே எனக்கு ஓகே, சூப்பர் கதை நான் நடிக்கிறேன் என்றார்.

விஜய் நடிக்கிறார் என்றதும் ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் என கமர்ஷியலாக சில மாற்றங்கள் செய்தோம் கதையில் என்று கூறியுள்ளார் இயக்குனர்.

SHARE