வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சிக்கு வெற்றி இரண்டு பெற்றோல் கலன்களுடன் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார்.

339

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை கோரி நாடாளுமன்றத்துக்குள் தீக்குளிக்கும் முகமாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இரண்டு பெற்றோல் கலன்களுடன் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வாசலில் வைத்து பொலிஸாரால் அவர்  தடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தின்போது அவரை தீக்குளிக்கவேண்டாம் என்று அமைச்சர் திகாம்பரம் உட்பட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் கோரினர்.

எனினும் தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் விடுக்கவேண்டும் என்று வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சிக்கு வெற்றி

2016ஆம் ஆண்டு முதல் தனியார் துறையினருக்கு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 2500 ரூபா சம்பள உயர்வுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களும் உள்வாங்கப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்திய அவசர செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவுத்திட்ட இறுதிநாளான இன்று சம்பள உயர்வு தொடர்பில் இணக்கம் எட்டப்பட வேண்டும் அல்லது தீக்குளிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எச்சரித்திருந்தார்.

அதன்படி அவர் இன்று பெற்றோலுடன் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் போது பொலிஸாரால் தடுக்கப்பட்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சமரச பேச்சுவார்த்தைகளின்போது தனியார்துறை பணியாளர்களின் 2500 ரூபா சம்பள திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களும் உள்வாங்கப்படுவர் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது.

எனினும் அதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறவேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன், ராதாகிருஸ்ணன், திகாம்பரம் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கு அமைய,

செய்தியாளர் சந்திப்பை கூட்டிய அமைச்சர் 2500 சம்பள அதிகரிப்பில் தோட்ட தொழிலாளர்களும் இணைத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார்.

SHARE