நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
வட்டவளையிலிருந்து அட்டன் நோக்கி அதிக வேகமாக வந்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமுற்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில்
17.07.2018. பிற்பகல் 2.30 மணியளவிலே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
அதிக வேகமான வந்த முச்சக்கரவண்டியில் திடீரென ஏற்பட்ட இயந்திரகோளாரினால் சாரதியின் கட்டுபாட்டை மீறி மண் மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவர் சிறு காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக விசாரணை தொடர்வதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
3 Attachments