இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திஜாராவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்த கிம்போ செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவச தொலைபேசி அழைப்புக்கள், வீடியோ அழைப்பு வசதிகளோடு மட்டுமல்லாது ஒலி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குக்கீஸ், லொக்கேசன் ஜிப் உள்ளிட்ட பல வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் சிம்காட்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக கிம்போ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.