வட்ஸ் ஆப் பணப்பரிமாற்ற சேவைக்கு அனுமதி மறுப்பு: இந்திய அரசு திட்டவட்டம்

218

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட வட்ஸ் ஆப் சேவையானது இந்தியாவில் பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு வாட்ஸ் ஆப்பின் ஊடாக பணப் பரிமாற்றம் செய்யக்கூடிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

பயனர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்ற போதிலும் இச் சேவையை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இத் தாமதத்திற்கு இந்திய அரசே காரணமாக இருக்கின்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டால் பயனர்களின் தனியுரிமைக்காப்பு தொடர்பில் பாதிப்புக்கள் ஏற்படும் என அரசாங்கம் கருதுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே குறித்த சேவையினை அறிமுகம் செய்வதற்கு அனுமதியளிக்க தாமதம் செய்து வருகின்றது இந்திய அரசு.

SHARE