வட கொரியாவின் அறை எண் 39 க்குள் நடப்பது என்ன? வெளியான ரகசியம்

211

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்துவதில் ஆர்வமாக இருக்கும் வடகொரியா இதன் காரணமாக தன் நாட்டின் மீது ஜநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தாலும் அதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் எவ்வித பிரச்சனையும் இன்றி பொருளாதார விடயத்தில் சாதாரணமாகவே இயங்கி வருகிறது.

இதற்கான காரணம் அந்நாட்டில் உள்ள அறை எண் 39 . இந்த அறைக்குள் சட்டவிரோதமான முறையில் சில வேலைகளை வடகொரியா செய்து வருகிறது.

பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் தான் இந்த அறையான 39 இருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் வட கொரியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தபோது, இந்த அறைக்குள் வைத்து Methamphetamine என்ற போதைமருந்தினை தயார் செய்து விற்பனை செய்யும் பணியில் வட கொரியா ஈடுபட்டது என்று NK என்ற செய்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையின் காரணமாக அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே, வட கொரியாவால் பொருளாதார பிரச்சனையின்றி இருக்க முடியும்.

எனவே, அமெரிக்க டொலருக்கு இணையான கள்ள டொலர்களை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள. இதனை தயாரிக்கும் பணி 39 என்ற அறைக்குள் நடைபெறுகிறது.

ஏனெனில், அமெரிக்காவின் சொந்த டொலர்கள் பயனற்றது என்பதால் கள்ள டொலர்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் கள்ள பணத்தினை சீனாவில் இயங்கும் கறுப்பு சந்தையின் வழியாக விற்பனை செய்கின்றனர். வட கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தைகளின் வழியாக முடுக்கி விடப்படுகிறது.

இந்த அறையில், கள்ள பணம் மட்டுமின்றி கடுமையான மருந்துகளும் தயார் செய்து விற்கப்பட்டு தங்கள் நாட்டின் மீதான பொருளாதார இழப்பினை வடகொரியாக சமாளித்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE