வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை படுதோல்வி

236

வட கொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறி படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா சபை மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 4 ஏவுகணை சோதனைகளை வட கொரியா அரசு நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று வட கொரியா அரசு செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை அமெரிக்க ராணுவமும் உறுதிப்படுதியுள்ளது.

எனினும், வட கொரியா எத்தனை ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பயிற்சி முகாம் தென் கொரியா எல்லையில் நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு வட கொரியா அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இரு நாடுகளின் நடவடிக்கையை கண்டிக்கும் விதத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தியதாக வட கொரியாவில் இருந்து ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு வட கொரியாவில் உள்ள Wonsan என்ற கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE