வட கொரியாவின் சர்வாதிகாரி இறந்து விட்டாரா? 

311
வட கொரியாவின் ஜனாதிபதியான கிங் ஜாங் உன் இறந்துவிட்டதாக டுவிட்டரில் காட்டுத் தீ போல் தகவல்கள் பரவின.உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி அதனை பரிசோதித்தும் அண்டை நாடுகளுக்கு கடும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

சமீபத்தில் அமெரிக்காவை அழித்து விடுவோம் என எச்சரித்த வட கொரியா, தென் கொரியாவுக்கு எதிரான வீடியோவையும் வெளியிட்டது.

இந்நிலையில் டுவிட்டரில் வட கொரியா ஜனாதிபதி கிங் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

தென் கொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான Han Min-goo என்பவர், கொரிய இராணுவத்திலிருந்து வந்த தகவலின்படி, உறுதிசெய்யப்படாத நிலையில் வட கொரியாவின் ஜனாதிபதியான கிங் ஜாங் உன் இறந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என டுவிட் செய்திருந்தார்.

இந்த தகவல் காட்டுத் தீ போல பரவவே, விசாரணை நடத்தியதில் டுவிட் செய்யப்பட்ட கணக்கு போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE