
சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஏவுகணை பரிசோதனைகளை செய்வதை நிறுத்த வேண்டும் என வட கொரியாவிற்கு ஜேர்மன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா சபை புதிய பொருளாதார தடைகளை விதித்தது.
அமெரிக்காவின் ஆதரவுடன் விதிக்கப்பட்ட இத்தடைக்கு வட கொரியா கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும் எனவும் வட கொரியா மிரட்டல் விடுத்தது.
இந்நிலையில், ஜேர்மன் நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரான Martin Schafer அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘உலகை அச்சுறுத்தும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும், கொரியா தீபகற்பத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை தீர்க்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் வட கொரியா சமாதானமான நிலையை ஆதரிக்காமல் விரோதமான வார்த்தைகளை உபயோகிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியா மீது ஐ.நா சபை கொண்டு வந்துள்ள புதிய பொருளாதார தடையை ஜேர்மனி ஆதரிப்பதுடன், உலக நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என Martin Schafer வேண்டுகோள் விடுத்துள்ளார்.