வட கொரியா அதிபர் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறார் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வட கொரியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உச்சகட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரியா தீபகற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பிய போர்க்கப்பலால் தீபகற்பத்தில் போர்பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் குறித்து சர்ச்சையாக விமர்சித்துள்ளார்.
தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள கிம் ஜாங், மிக கடுமையான மனிதர்களை கையாண்டு வருகிறார். அவரது ஆட்சி காலத்தில் தான், கிம் ஜாங்கின் சித்தப்பா மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் கொலை செய்யுமாறு கிம் ஜாங் தான் உத்தரவிட்டிருக்க வேண்டும் என சந்தேகம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், கிம் ஜாங்கின் ஆட்சி முறை சிறப்பாக உள்ளது என அந்நாட்டு மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுகுறித்து என்னிடம் எவ்வித கருத்தும் இல்லை. சுமார், 26 அல்லது 27 வயது மதிக்கத்தக்க அவர், பார்ப்பதற்கு அழகாகவும், அதே நேரத்தில் அறிவுள்ளவராகவும் இருக்கிறார்.
அவர், மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை குறித்து டொனால்டு கூறியதாவது, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. ஆனால் அந்த சோதனைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இது பார்ப்பதற்கு செஸ் விளையாட்டு போன்று இருக்கிறது. ஆனால், வட கொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை குறித்து பெரிதாக நான் விவாதித்துக் கொண்டது கிடையாது என கூறியுள்ளார்.