வட மாகாணக் கல்வி அமைச்சருக்கு யாழ் ஏழாலையில் நடந்த கதி இது ! வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அதிர்ச்சியான சம்பவம்

374

 

வட மாகாணக் கல்வி அமைச்சருக்கு யாழ் ஏழாலையில் நடந்த கதி இது ! வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலைப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராக உள்ள குருகுலராஜா ஆகியோர் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

19383_377266832471148_5298936847070728969_n

அமைச்சர் பாடசாலைக்குள் நுழைந்து அதிபரின் அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு அதிபர் இருக்கவில்லை. அதனையடுத்து அமைச்சர் பாடசாலையின் வகுப்புகளுக்குள் சென்ற போதும் ஆசிரியர்களோ மாணவர்களோ அவர்களைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்கள்.

அவர்களுக்கு கல்வி அமைச்சர் யார் எனத் தெரியாது அவ்வாறு இருந்ததாகத் தெரியவருகின்றது. அமைச்சர் இந்த நிலையையடுத்து பெரிதும் மனச்சோர்வு அடைந்ததாகத் தெரியவருகின்றது.

சிறிது நேரத்தில் அதிபர் அங்கு வந்துவிடவே அமைச்சர் இந்த விடயம் பற்றி அதிபருக்கு தெரிவித்து ஆலோசனை வழங்கியதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் யார் எனத் தெரியாத நிலையில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் இயங்கும் அளவிற்கு குருகுலராஜாவின் பிரபல்யம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

வடபகுதி ஆசிரியர்களுக்கும், வடபகுதிப் பொதுமக்களுக்கும் தமிழ்த்தேசியமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியின் பெயர் மாத்திரமே தெரியுமே தவிர அந்தக் கூட்டமைப்பில் இருந்து விளக்குமாறு போட்டியிட்டாலும் அவர்கள் அதனைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் விளக்குமாறுக்கு வாக்குப் போட்டுப் பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE