வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

462

 வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 b.denishwaran
கட்டடத்திணைக்களத்தின் ஊடாக வட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களிலும் 55 பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி 10 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட 20 பஸ் நிலையங்களும், 8 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட 35 பஸ் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், யாழ்பணத்தில் 16 ம், மன்னாரில் 10 ம், முல்லைத்தீவில் 10 ம், கிளிநொச்சியில் 10 ம், வவுனியாவில் 9 ம் என்ற வீதத்தில் மொத்தமாக 55 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றின் பணிகள் யாவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE