முதலமைச்சரின் அமைச்சானது வீடமைப்பு நிர்மாணம் மற்றும் சுற்றுலாத்துறையையும், உள்ள 10ராட்சித்திணைக்களம், தொழிற்றுறைத்திணைக்களம், மாகாணக்காணி ஆணையாளர் திணைக்களத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்காக 2016 ம் ஆண்டிற்கு ரூபா 2,357.191 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 2,038.691 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும ; ரூபா 318.5 மில்லியன் மூலதனச்செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அமைச்சிற்கு 2016 ம் ஆண்டிற்கு ரூபா 57.491 மில்லியன் மீண்டெழும் செலவினத்திற்காகவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 8 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 59 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு துத்துறைக்கு 2015ம் ஆண்டில் ரூபா 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 08 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 01 வீடு புனரமைப்பு செய்யப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டத்தினை விரிவுபடுத்தும் நோக்கில் 2016 ம் ஆண்டுக்கு ரூபா 9 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் அடுத்த வருடம் கன்னார் கூரைத் தகடுகளை தவிர்த்து ஓடுகளால் அமைந்த கூரை வீடுகள் வழங்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை
எமது மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை எமது மக்களுக்கு நன்மை தரும் துறையாக விருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ‘பல இலட்சம் சுற்றுலாப் பயணிகள் பல இலட்சம் வாய்ப்புக்கள்;’ என்ற தொனிப் பொருளில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு ஆய்வுக்கருத்தரங்கம் ஒன்றும் வடக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்டது. இவ்வருடம் ரூபா 36 மில்லியன் ஒதுக்கீட்டில் 5 மாவட்டங்களிலும் இனங்காணப்பட்ட வேலைத் திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தொல் பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனவளப்பாதுகாப்பு திணைக்களம் என்பவற்றிடமிருந்து உரிய அனுமதிகள் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதங்கள் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறையின் வளர்ச்சி தனியார் துறையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டிய விடயமாகும். 2016 ம் ஆண்டிற்கு ரூபா 50 மில்லியன் நிதியானது சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியானது,
01. சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய ,டங்களை அழகு படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
02. ஒருங்கிணைக்கப்பட இ;ட வசதிகள் சௌகரியங்கள் உள்ளடங்கிய மையங்களை தனியார் துறையின் பங்களிப்புடன் உருவாக்குதல்
03. சுற்றுலாத் துறைக்கான தகவல்களை வெளியிடுதல் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்களுக்கான இயலுமை விருத்திப் பயிற்சிகளை வழங்குதல்.
ஆகிய பிரிவுகளின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படவுள்ளன.
ஏனையவை
எமது அமைச்சினால் இந்த வருடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குறைநிவர்த்தி நடமாடுஞ் சேவையும் மன்னார் மாவட்டத்தில் ஒரு குறைநிவர்த்தி நடமாடுஞ் சேவையும் நடாத்தப்பட்டது. அத்துடன் மிகவும் கஸ்ரப்பட்ட பிரதேசங்களுக்கு மக்கள் சந்திப்புக்களுக்கான குறைகேள் பவனி போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஆண்டில் 5 குறைநிவர்த்தி நடமாடுஞ் சேவைகள் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். பல காலமாகத் தீர்க்கப்படாத குறைகள் இச் சேiயின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
உள்ள10ராட்சித்திணைக்களம்
உள்ளுராட்சி திணைக்களத்தை பொறுத்த வரை ஒரு மாநகர சபை, 5 நகர சபை, 28 பிரதேச சபைகள் ஊடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. உள்ளுராட்சி சபை வீதிகள், திண்மக்கழிவகற்றல், கிராமிய மாற்றீட்டு சக்தி மற்றும் சனசமூக நீர் விநியோகம் ஆகிய துறைகளின் ஊடாக உள்ள10ராட்சி சபைகளினால் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக மீண்டுவரும் செலவு ரூபா 1,816.2 மில்லியனும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 6.5 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 224 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இ.வ்வருடம் 06 கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன் 05 மாவட்டங்களிலும் 23 வாராந்த சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 06 கிராமங்களுக்கான சிறிய நீர்விநியோகத்திட்டங்களும் 01 பொதுக்கிணறும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பின்தங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான கிராமங்களின் அபிவிருத்தியின் கீழ் 25 கிராமிய வீதிகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டில் வீதிகளுக்காக கிடைக்கப்பெற்ற 74 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தேவையினை அடிப்படையாகக் கொண்டு பகிரப்பட்டிருந்தபோதிலும், 2016 ம் ஆண்டிற்கு வீதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவும் நிதி ஆணைக்குழுவினால் சனத் தொகைக்கு ஏற்ப 5 மாவட்டங்களுக்கும் பகிரப்பட்டுள்ளது. இதனால் சனத்தொகை குறைந்து ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உரிய நிதியைப் பெறாதது ஒரு குறையே.
உள்ளுராட்சி சபைகளுக்கான வருமான மூலங்களை மேம்படுத்தம் முயற்சியாக 2015 ,ல் உருவாக்கப்பட்ட மாகாண வருமான, வரிகள் திணைக்களம் மூலம் திரட்டப்படவுள்ள முத்திரைத்தீர்வையும், நீதி மன்றத் தண்டப்பணமாக சுமார் ரூபா 170 மில்லியனானது 2016 இல் உள்ளுராட்சி சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அதேவேளை 2016 ம் ஆண்டுக்கு இத்தொகை ரூபா 200 மில்லியன் ஆக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு உயர்ந்தால் அத்தொகை 2017ம் ஆண்டுக்கு முன்னதாக மாற்றப்படும். மேலும் 40 வருமான பரிசோதகர்கள் இவ்வருடம் உள்ளளுராட்சி சபைகளுக்கு நியமிக்கப்பட்டு வருமான முகாமைத்துவம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
உள்ளுராட்சி மன்ற சேவைகளைப் பொறுத்தவரையில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் நாம் பாரிய சவால்களை எதிர் நோக்குகின்றோம். இதில் நவீன முறைகளை அறிமுகப்படுத்துவதில் நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
காணி ஆணையாளர் திணைக்களம்
காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது. பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். ஆயினும் பல தேவைகளின் பொருட்டு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களும் எம்மால் மக்கள் நலன் கருதும் வகையிலேயே கையாளப்படுகின்றன. 2016 ம் ஆண்டுக்கு ரூபா 87 மில்லியன் மீண்டுவரும் செலவிற்கும் பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 1.5 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைக்கு ரூபா 3 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டில் காணி தொடர்பான தகவல்கள், இலத்திரனியல் – அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை (E-SLIMS) தரவுத்தளத்தில் 30000 பதிவுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் காணி தொடர்பான தகவல்களை நேரடியாகவே பார்வையிட்டு தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். மேலும் இவ்வாண்டு 57000 அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் 5 மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 1000 இற்கு மேலான அளிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்டன.
தொழிற்றுறைத் திணைக்களம்
தொழிற்றுறைத் திணைக்களத்தினூடாக கைத்தொழில் மற்றும் வாழ்வாதார தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்தலும் அதனை மேம்படுத்தலும் கைத்தறி நெசவுப்பயிற்சி, மற்றும் வரையறுக்கப்பட்ட பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சிகளான தும்பு, மரவேலை, மட்பாண்டம் வனைதல் போன்ற உள்ளார். வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுகைத் தொழில் பயிற்சி வழங்குதல் போன்றவற்றுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்நிதியினை 27 கைத்தறி நெசவு நிலையங்கள், 11 சிறுகைத் தொழில் நிலையங்கள், 3 விற்பனை நிலையம், நூல் சாயமிடும் நிலையம், 2 வியாபார மத்திய நிலையங்கள10டாகப் பயன்படுத்தி தனது சேவைகளை வழங்கி வருகின்றோம். இதற்காக ரூபா 78 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 1.5 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடைக்கு ரூபா 15 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2016 ஆண்டு ஒதுக்கீட்டில் கச்சாயில் அமைந்துள்ள தும்பு பயிற்சி நிலையத்தினை புனரமைப்பு செய்தல், சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் அத்துடன் வியாபார ஆலோசனை வழங்குதல், மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள சந்தை வாய்ப்பு நிலையத்தை மேம்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.
நிறைவுரை
இந்த வருடம் நாங்கள் தெரிவு செய்த சில வேலைத்திட்டங்கள் எமக்கு அவசியமானதாக ,ருந்த போதும் நிதி ஆணைக்குழுவின் பிரமாணத்தினைத் திருப்தி செய்யாமையால் நிதி ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட வேலைகளுக்குப் பதிலாக மாற்றுத் திட்டங்களுக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. மேலும் உள்ள10ராட்சி அமைப்புக்கள் அடிமட்ட மக்களின் தேவைகளை ,னங்கண்டு அவற்றினை முன்னுரிமைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. இவற்றினாலும் முன்னர் குறிப்பிட்டது போன்றதான இதர சில காரணங்களாலும் சில அபிவிருத்திட்டங்களை உரிய காலத்தில் பூரணப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள போதும் ,வ்வருட முடிவிற்கு; ஒதுக்கீடுகள் யாவும் செலவு செய்யப்படுவன என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே 2016ம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்கள் ,ந்த சவால்களை சமாளிக்கக்கூடியதான விதமாகத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றது. அதற்கான ஆரம்ப வேலைகள் இப்பொழுதே முடுக்கி விடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கூட எமது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையின் மூலமாகச் செய்யவேண்டிய செயற்பாடுகள் எம்மால் விவாதிக்கப்பட்டன. 2016ம் ஆண்டிற்குரிய அமைச்சினதும் திணைக்களங்களினதும் வேலைகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிறைவுசெய்கின்றேன்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்