வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன் நேற்று (09) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சுழற்சி முறை ஆசனத்திற்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதற்கமைய அடுத்த சுழற்சி முறை ஆசனத்திற்காக செ. மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.