வவுனியா உள்ளக வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று காலை 10.45 மணி அளவில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அலுவல்கள் அமைச்சர் திரு.டெனீஸ்வரன் அவர்களால் முன்னாள் போராளிகளில் அங்கவீனமுற்றோருக்கான வாழ்வாதார உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மதத்தலைவர்களும் கிராம சேவகர்களும் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தையல் இயந்திரங்கள் நீர் இரைக்கும் இயந்திரங்கள் குளிர்சாதனப்பெட்டி மற்றும் கால்நடை விலங்குகள் வளர்க்க தேவையான பணம் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டன. 44 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தலா 50000ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக திரு.டெனீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
Thinappyal Newsவட மாகாண சபை அமைச்சர் திரு. டெனீஸ்வரனால் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. (காணொலி) பாகம் 01
Posted by Thinappuyalnews on Thursday, 10 December 2015
Thinappuyal Newsவட மாகாண சபை அமைச்சர் திரு. டெனீஸ்வரனால் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. (காணொலி) பாகம் 02
Posted by Thinappuyalnews on Friday, 11 December 2015