வத்தளையில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

237

வத்­தளை ஒல்­லி­ய­முல்­லவில் தமிழ்ப் பாட­சாலை அமைப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றுக் காலை ஏற்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் திடீரென மேடையை நோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாட­சாலை அமைப்­ப­தற்கு தமது கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர்.

இது சிங்­க­ள­வர்கள் வாழும் பிர­தேசம் என்றும் பாடசாலை அமைப் பதால் பக்­கத்தில் உள்ள மைதா­னத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­ட்டு, எமது பிர­தேச பிள்­ளைகள் விளை­யா­டு­வ­தற்கு மைதானம் இல்­லாமல் போய் விடு­மென்றும் நிகழ்வில் பிர ­தம அதி­தி­யாக கலந்து கொள்ள வருகை தந்­தி­ருந்த அமைச்சர் ஜோனிடம் பௌத்த குருமார் தமது எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, ஒலி­ய­முல்ல சந்­தியில் அப்­ பி­ர­தே­சத்தின் சிங்­கள மக்கள் தமிழ் பாட­சாலை அமைப்­ப­தற்கு எதி­ராக கைகளில் பதா­தை­களை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

“இதுவா உங்­களின் நல்­லி­ணக்கம் நல்­லாட்சி இதுவா” எனது ஜனா­தி­ப­தி­யிடம் கேள்­வி­யெ­ழுப்பும் விதத்­தி­லான பதா­தை­களை கையில் ஏந்­தி­யி­ருந்தார்.

ஒலி­ய­முல்ல சந்­தியில் ஆர்ப்­பாட்டம் நடத்­திய கூட்­டத்­தினர் நிகழ்ச்சி இடம்­பெற்ற மேடைக்கு அருகில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­ட­தோடு அமைச்சர் ஜோனுக்கு எதி­ரா­கவும் கூச்­ச­லிட்­டனர்.

இதன்­போது பொலிஸார் பாது­காப்பை பலப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டக்­
கா­ரர்கள் மேடைக்கு அருகில் செல்­வதை தடுத்து நிறுத்­தினார். பின்னர் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க உட்­பட நிகழ்வில் கலந்­து­கொண்டோர் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­டனர்.

இதன்பின்னர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் விழா மேடையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் புகைப்படத்துடன் தொங்க விடப்பட்டிருந்த பதாதைகளை செருப்புக்களினால் தாக்கி தீவைத்து கொளுத்தினர்.vatala

SHARE