வத்தளை – ஹேக்கித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சி.சி.ரீ.வி காணொளிகள் கிடைத்துள்ள நிலையில், அதனைக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இரண்டு கார்களில் வந்த சந்தேகநபர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் 24 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தங்கையும் உடனிருந்த போதிலும், அவருக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
இரு பாதள உலக குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே இந்த சம்பவத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.