வந்தாறுமூலையில் கூட்டமைப்பினருக்கு மாபெரும் வரவேற்பளித்த மட்டு மக்கள்- 1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது: இரா. சம்பந்தன்

287

 

இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

நீண்டகாலமாக தமிழ் மக்கள் எங்களிடமிருந்து பல விடயங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்கள் நாங்களும் நீண்டகாலமாக அந்த கருமங்களை நிறைவேற்றுவதற்கு எம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கின்றோம்.

இந்த நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் இந்த நாட்டை பிரிக்கும்படியாக நாங்கள் கேட்கவில்லை இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் கூட நாங்கள் கேட்கவில்லை.

ஆனால் மலைநாட்டுப் பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் கமிசனுக்கு முன்னால் சென்று இந்த நாட்டில் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தபடவேண்டும் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் ஒரே மக்கள் அல்ல வெவ்வேறு இனங்களைச் சார்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் ஆகவே இந்த நாட்டில் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதாக இருந்தால் ஒரு சமஸ்டி ஆட்சி முறைவேண்டுமென கேட்டார்கள்.

அதனை விபரிக்கின்ற போது அவர்கள் கூறினார்கள், நாட்டில் கண்டியன் சிங்கள மக்கள் வாழக்கின்றார்கள் அவர்கள் ஒரு இனம் கீழ் நாட்டு சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் அவர்கள் இன்னுமொரு இனம் வடகிழக்கில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அவர்கள் இன்னுமொரு இனம் சமஸ்டியின் அடிப்படையில் புதிய அரசியல் அதிகாரம் இந்த மூன்று இனங்களுக்கும் தாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அளிக்கப்படவேண்டுமென கேட்டார்கள்.

கண்டியன் சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் கண்டிய மன்னன் ஆட்சிசெய்த பிரதேசத்தில் கீழ்நாட்டு சிங்களவர்களுக்கு கீழ்நாட்டு சிங்கள மன்னன் ஆட்சிசெய்த பிரதேசத்தில் வடகிழக்கில் தமிழ் மன்னன் ஆட்சி செய்த தமிழ் பிரதேசத்தில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி நாட்டில் ஏற்படவேண்டுமென கேட்டார்கள் நாங்கள் சமஸ்டியையும் கேட்கவில்லை அதிகாரப்பகிர்வையும் கேட்கவில்லை பிரிவினையையும் கேட்கவில்லை.

1972ம் ஆண்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டபோது தந்தை செல்வநாயகம் அண்ணன் தர்மலிங்கம் ஊடாக பாராளுமன்றத்தில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு அந்த அரசியல் சாசனத்தின் ஊடாக வரவேண்டுமென கேட்டார்,

அது மாத்திரமல்ல ஒரு கணிசமான அதிகாரப்பகிர்வு ஏற்படக்கூடிய விதத்தில் ஒரு தீர்வு வரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள் அந்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்ட காரணத்தின் நிமிர்த்தம்தான் 1976ம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் தமிழீழ பிரகடணத்தை செய்வதற்கு சம்மதித்தார் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

வந்தாறுமூலையில் கூட்டமைப்பினருக்கு மாபெரும் வரவேற்பளித்த மட்டு மக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வந்தாறுமூலை பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு  வந்தாறுமுலை நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றிலில் இடம்பெற்றது.

வந்தாறுமூலை பொதுச்சந்தையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதிதிகளாக அழைத்துவரப்பட்டனர்.

முதன்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இதன் போது நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கத்தை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

SHARE