வன்னிப் பெரும் நிலப்பரப்பு முஸ்லீம் அரசியல் தலைமைக்குப் பறிபோகும் ஆபத்து!

212

 

கடந்த கால அரசியல் வரலாற்றில் பல முன்னெடுப்புக்களோடு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து வடகிழக்கைப் பிரித்த முஸ்லீம் அரசியல் தலைமைகள் தற்பொழுது தேசிய அரசாங்கத்தின் ஊடாக தமிழ் பிரதேசங்களில் இருக்கக் கூடிய வாக்குகளைக் கைப்பற்றி அதன் ஊடாக தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ இவ்விடையம் தொடர்பாக எந்தவித முன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கட்சிக்குள் மோதல்களையும், பிரிவினை வாதக் கருத்துக்களையுமே முன்வைத்து வருகின்றார்கள்.
குறிப்பாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகள் தமது தனிக்காட்டு அரசியலைச் செய்து வருகின்றனர். தமிழ்க் கட்சிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள அதனைச் சந்தர்பமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லீம் அரசியல் தலைமைகள் தேசிய அரசாங்கத்தின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபை சின்னாபின்னமாக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக வன்னி பெரும் நிலப்பரப்பில் அமைச்சர் ரிசாட் பதியூதினும் பிரதி அமைச்சர் மஸ்தான் அவர்களும் தமிழினத்திற்கு சேவை செய்வதாக நினைத்து அவர்களின் அரசியல் அமைப்பை தக்கவைத்துக் கொள்வே களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக காணி குடியிருப்புக்கள், கோவில் புனரமைப்பு, உதவித் தொகை வழங்குதல், மலசல கூடம், கிணறு, வீடமைப்பு போன்றவற்றைச் செய்து கொடுத்தல் போன்ற விடையங்களில் இருவரும் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். ஆனால் வன்னிப் பெரும் நிலப்பரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆடு, மாடு, கோழி கொடுப்பதிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலுமே மிக அக்கறையுடன் செயற்படுகின்றனர். அடுத்த மாகானசபைத் தேர்தலில் யார் பதவிக்கு வருவது, யாரைக் கொண்டு வருவது, எந்தக் கட்சி வருவது என்கின்ற நிலைப்பாடே இவர்களுக்குள் இருக்கின்றது. இந் நிலைப்பாடு மாற்றியமைக்கப்படவேண்டும். இன்னமும் தமிழ் மக்களுக்கான தேசியம் சுயநிர்ணயம் வென்றெடுக்கப்படவில்லை.
அதனை வென்றெடுக்கும் வரையிலாவது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் ஒருங்கமைப்புச் செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஒற்றுமையுடன் செயற்படுவதன் ஊடாகவே தமிழ் மக்கள் இதுவரை காலமும் போராடிய போராட்டத்தினுடைய பிரதி பலனை அடையமுடியும். இடை நடுவில் குழப்பிக் கொண்டு செல்வதன் ஊடாக தேசிய அரசாங்கமும் முஸ்லீம் தலைமைகளுமே அந்த பிரதி பலனைப் பெற்று விட்டுச் செல்கின்றார்கள்.
வடகிழக்கு இணைப்பு அவசியம் என்பதனை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டும். நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் இவ் அரசங்கத்தினுடைய செயற்றிட்டம் அனைத்தும் மறைமுகமான இனப்படுகொலை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி என்பது வேறு, தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்பது வேறு. முஸ்லீம் அரசியல் தலைமைகள் கிழக்கை சுவீகரித்துக் கொண்டது போன்று வடக்கிலும் தமது சுவீகரிப்பை திட்டமிட்டு ஆரம்பித்துள்ளது. காலத்துக் காலம் மாறி வருகின்ற அரசாங்கங்களுடன் இணைந்தே முஸ்லீம் அரசியல் தலைமைகள் தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்வது வழக்கம். தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள் அல்லாவின் பெயரிலும் பொய்ச் சத்தியம் செய்வார்கள். தற்பொழுது முஸ்லீம் அரசியல் தலைமைகள் தமிழ் பிரதேசங்களில் தமது அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பல ஊடகவியலாளர்களை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

நடு நிலைமை என்று கூறிக்கொண்டு செயற்படுகின்ற ஊடகங்கள், அதன் ஊடகவியலாளர்களும் அரசாங்கம் கொடுக்கின்ற பணத்திற்காக அடிபணிந்து செல்வது என்பது ஆரோக்கியம் அற்றது.
ஆகவே தமிழினம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதாக இருந்தால் சோரம்போகும் அரசியலில் இருந்து வெளிவரவேண்டும். இவ்வாறான நிலமை தொடருமானால் முஸ்லீம் அரசியில் தலைமைகளிடம் தமிழ் அரசியல் கட்சிகள் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலமை உருவாகும். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலமைகள் ஒன்றினைந்து தேசிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ, முஸ்லீம் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ உங்களது அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வடக்கு கிழக்கிலிருந்து இக்கட்சிகளை விரட்டி அடித்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்படுங்கள். காலத்தின் தேவை அறிந்து அரசியல் செய்வது உசிதமானது. என்பதனையே நாம் சுற்றிக்காட்ட விரும்புகின்றோம்.

SHARE