வன்னேரிகுளத்தில் பௌதீகதளமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.

237

maxresdefault

கிளிநொச்சி மாவட்டம், வன்னேரிகுளமானது இயற்கை அம்சங்களை கொண்ட ஒரு அழகிய கிராமமாகும்.

விவசாய கிராமமான இந்த கிராமத்தில் அழகிய மரங்கள், பறவைகள், யானைகள், மலைகள் என பல இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

எனவே, இந்த கிராமத்தில் பௌதீகதளமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்வாறு சுற்றுலா தளமொன்றை அமைக்கும்போது குறித்த பகுதிக்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை அழைத்து வரமுடியும். அத்துடன், இதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE