பொதுவாக பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் வருவது வழக்கம். ஆனால் தனக்கு பிறகு அனைவருமே சினிமாவில் நுழைந்தார்கள் என்றால் அது நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் மட்டும் தான் நடக்கும்.
அவரது மகள்கள் மற்றும் மகன், ஒரு மனைவி என அனைவருமே சினிமாவில் நுழைந்தவர்கள் தான்.
அவரது மகள்கள் இப்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ஸ்ரீதேவி தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது ப்ரீத்தா ஹரி டப்பிங் ஸ்டூடியோ வைப்பது என சினிமாவிற்குள் தான் உள்ளார்கள்.
அருண் விஜய் இப்போது தான் ஆக்டீவாக படங்கள் நடித்து வருகிறார்.
பிரபலம் சொன்ன டிப்ஸ்
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார்.
அதன் பெயர் கிரீன் ஸ்மூத்தி, இதை காலை நேரத்தில் அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம், சருமத்தை பாதுகாக்கவும் உதவுமாம்.
செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, பார்ஸ்லே, பெர்ரிகள், இஞ்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது டிப்ஸ் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.