வயிற்றில் புழுக்கம் அதிகம்: வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்

206

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும்

மேலும் ஒருவரது உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் அதிகம் இருந்தால், பல கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உடலில் அரிப்புக்களுடன் காய்ச்சல், வீக்கம், வாந்தி, அசாதாரண அல்லது தீவிர தலைவலி, வேகமான இதய துடிப்பு, மங்கலான பார்வை இவ்வாறு அறிகுறிகள் காணப்பட்டால் அது உடலினுள் புழுக்கள் இருப்பதாக அர்த்தம்.

அடிக்கடி வயிற்றுப் போக்கு

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை,குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.

அடிவயிற்றில் வலி

புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

உடல் சோர்வு

உடல் பலவீனமானால் சோர்வு அதிகரித்து நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.

பசியின்மை

வயிற்றில் அதிகமான அளவில் புழுக்கள் பெருகி இருந்தால் உங்கள் எடையும் குறைய ஆரம்பிக்கும். மேலும் கடுமையாக பசியின்மையும் ஏற்படும்.

மன அழுத்தும்

உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும். அதோடு செரிமான பிரச்சனையும் இருந்தால் இருமடங்கு மன வேதனையை சந்திக்கக்கூடும்.

இரத்த சோகை

இரத்த சோகை வந்தால் முதலில் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் மருந்துகளை உட்கொண்டு உடலை சுத்தப்படுத்துங்கள்.

ஒட்டுண்ணிகள்

ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின் சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். மேலும் இதனால் புண்கள், உறுப்புக் கோளாறு, மூட்டு வீக்கம் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படும்.

SHARE