வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும் வேப்பம் பூ

194

625.500.560.350.160.300.053.800.748.160.70 (7)

வேப்ப மரத்தின் இலைகள், காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது.

  • வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.
  • தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஓரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும்.
  • வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து, தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
  • தலையில் நீர்கோர்த்துவிட்டால் வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.

  • வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஒழியும்.
  • வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும்.
  • வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.
  • வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ, உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
  • வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம், மேலும் பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாவதோடு, ரத்த ஓட்டமும் சீராகும்.
SHARE