நம்மில் பலருக்கும் வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்று கொழுப்பு. வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரிக்க ஆமணக்கு எண்ணெய் சிறந்த மருந்தாகும். இது கர்ப்பம், அதிக உணவு சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஏற்படும் கொழுப்பை மற்றும் தொப்பையை கரைக்க உதவும்.
நீங்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி வயிற்று கொழுப்பை இழக்க வைக்கலாம்.
தேவையானவை
அரைத்த 1 அங்குல இஞ்சி வேர்
1 கிரீன் தேநீர் பை
1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
1 கப் தண்ணீர்
தயாரிப்பது எப்படி
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
3 நிமிடங்கள் அரைத்த இஞ்சி வேர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க வைத்த நீரை வடி கட்டவும்.
பச்சை தேயிலை பையை 1 நிமிடம் வடி கட்டிய நீரில் இட்டு வைக்கவும்.
தேயிலை பையை பிழிந்து, ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி, பருகவும்.
தினமும் இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொப்பை மற்றும் கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம்.