வரட்சியான காலநிலையால் தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

245
fire1-415x260

தேயிலை விலை வீழ்ச்சியால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வரட்சியான காலநிலையால் மேலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தேயிலை உற்பத்தி வீழ்ச்சியினால் தற்காலிகமாக பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கேகாலை மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களில் உள்ள பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் தொழிலாளர்கள் பல பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உலக சந்தையில் தொடர்ந்தும் தேயிலைக்கான விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE