வரட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வந்த நிலையில்ää கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த கொத்மலை மொறபே பழைய நகர பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு வந்தது. பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவ் விகாரை மீண்டும் நீரில் சங்கமமாகி வருகின்றது.