திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரட்சனை கொடுமையால் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பபட்டுள்ளார்.
டாக்டர் இளஞ்சேரனுக்கும் திவ்யாவிற்கும் (25) கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 1.5 வயதில் குழுந்தை உள்ளது.
டாக்டர் மாப்பிள்ளை என்பதால் 30 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளி , 100 சவரன் நகை என வரதட்சனையாக கொட்டி கொடுத்துள்ளார் திவ்யாவின் தந்தை!
இது போதாது டாக்டர் மாப்பிள்ளை இன்னும் 10 லட்சம் வாங்கி வா எனக் கேட்டு தொடர்ந்து திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் நேற்று திவ்யா காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். ஆரம்பத்தில் நாடகமாடிய
கணவன் இளஞ்சேரன் , மாமனார் மற்றும் மாமியார், பொதுமக்களின் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்யப்பபட்டுள்ளனர்.
மருத்துவ படிப்பு உயிர் காக்கும் சேவையாக பார்க்கும் படும் நிலையில் அது இன்றைக்கு ”ப்ரைஸ் டேக்” ஆக மாறியுள்ளது. எத்தனையோ விழிப்பணர்வுகள் வந்தாலும் இந்த மாப்பிள்ளைகள் ப்ரைஸ் டேக் ஆக பார்க்கப்படும் நிலை இன்றும் மாறவில்லை!
பெண்ணை பெற்றவர்களும் டாக்டர் மாப்பிள்ளை, ஃபாரின் மாப்பிள்ளை என ஆசைப்பட்டு அவர்கள் டிமாண்ட் செய்யும் பணத்தை கொட்டிக் கொடுக்கின்றார்கள், அவர்களின் குண நலன்கள் பண்பாடுகளை பற்றி விசாரிக்காமல்! இறுதியில் தான் ஆசையாக வளர்த்த மகளை பலி கொடுக்கின்றார்கள். தன் மகளோடு வாழ்கை நடத்த பேரம் பேசுகின்றானே இவன் எப்படி நம் மகளுக்கு நல் வாழ்கை கொடுப்பான் என பெற்றோர்கள் யோசிக்காமல் போய் விடுகின்றார்கள்.
தன்னோடு இல்லறம் நடத்த பெண் பணம் கேட்டால் அவளுக்கு பெயர் வேசி ,
அதையே ஆண் கேட்டால் அதற்கு பெயர் வரதட்சனை!
அவரவரின் அந்தஸ்திற்கு தகுதார்ப் போன்று வரட்சனை எனும் பேரம் பேசப்பட்டு வருகின்றது இதனால் எத்தனை பெண்களின் வாழ்கை நாசமாகின்றது , எப்பொழுது மாறும் இந்த நிலை?