வரலாறு காணாத போராட்டம் – மெரீனாவில் லட்சக்கணக்கானோர் குவிந்து வருவதால் பரபரப்பு

305

 

50 வருடங்களுக்கு முன்பு இந்தி எதிர்ப்பு என்னும் கோஷத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் எழுச்சியாக நடைபெற்று வெற்றியும் காணப்பட்டது.

சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு தற்போது அந்த நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளதோ என்று நினைக்க தோன்றுகிறது.

அந்தளவிற்கு காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஜல்லிகட்டுக்கு ஆதரவாக லட்சகணக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சேலம்,கோவை,வேலூர்,தஞ்சை திண்டுக்கல்,நெல்லை,திருச்சி என அனைத்து பெருநகரங்களிலும் மட்டுமின்றி குக்கிராமங்களில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உச்சகட்டமாக சென்னை மெரீனாவில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தால் நடத்தப்படும் போராட்டம் தமிழகம் வரலாறு காணாததாகும்.

எந்த ஒரு அமைப்போ தலைவர்களோ இல்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சுமார் 10,000 பேர் குழுமி நடத்திய இப்போராட்டத்தில் தற்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் சமதானமும் ஒன்றும் எடுபடவில்லை தொடர்ந்து மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இப்போராட்டம் சூடுபிடித்து வருகிறது.

நிச்சயம் தமிழகம் வரலாறு காணாத மாபெரும் போராட்டம் இது என்றால் மிகையல்ல.

இந்த போராட்டத்தின் பலத்தை கண்டு தமிழகத்தை திரும்பி கூட பார்க்காத அனைத்து ஆங்கில சேனல்களும் தற்போது இந்த போராட்டத்தை முழு நேரம் ஒளிபரப்பி வருகின்றன.

உலக அளவிலான நிறுவனமான பிபிசி கூட இந்த செய்திக்கு முக்கியவத்தும் கொடுத்து முழுநேர ஒலிபரப்பு செய்கிறது.

எனவே இந்த வரலாறு காணாத போராட்டத்தால் இந்திய அரசு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர் போராட்டக்காரர்கள்.

SHARE