வரலாற்றில் முதன்முறையாக! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குணமான அதிசயம்

229

8807b02d-6e3c-4ae5-944f-4cdb7d1b84f6

பிரித்தானியாவில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குணமான அதிசய சம்பவம் நடந்துள்ளது.

Human Immuno-deficiency Virus (HIV) இந்த கிருமி பாதிப்பால் தான் Acquired immunodeficiency syndrome (AIDS) ஏனும் கொடிய உயிர்கொல்லி நோய் ஏறபடுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு 44 வயது மனிதர் அதற்கு கண்டு பிடித்துள்ள மருந்தை எடுத்து கொண்டதன் மூலம் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.

இந்த மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் National Institute for Health Research துறையின் தலைவர் மார்க் சாமியீல்ஸ் கூறுகையில், எச்.ஐ.வி யால் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அந்த கிருமியானது முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து அது உடல் முழுவதையும் பாதிக்கிறது.

இந்த நோய்கான மருந்தை நாங்கள் கண்டுபிடித்ததில் அது நல்ல பலனை அளித்துள்ளது. இந்த மருந்தானது இரண்டு நிலைகளில் வேலை செய்கிறது.

முதலில் உடலில் செலுத்தப்படும் தடுப்பூசியானது எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட உயிரணுக்களுள் சென்று அதை சரி செய்கிறது.

பின்னர் Vorinostat ஏன்னும் மருந்தை நோய் பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தும் போது எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டு செயலிழந்த முக்கிய உயிரணுக்களை அது செயல்பட செய்கிறது என அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நோய்க்கான மருந்துகளை மேலும் அதிக அளவில் மற்றும் சிறந்த முறையில் கண்டுபிடிக்கும் எங்கள் ஆராய்ச்சி தொடரும் என இதில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

SHARE