வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

319

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்க உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 20ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமைச்சரவையில் நிலவி வரும் முரண்பாடுகளை களைவதற்கு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுக்களுக்கான துறை ஒதுக்கீட்டில் பாரியளவு பிரச்சினைகள் காணப்படுவதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் முரண்பாட்டு நிலைமை காரணமாக அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இடையில் பணிகளை பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துறை ஒதுக்கீட்டில் நிலவி வரும் குழப்ப நிலைமை அரசாங்க அதிகாரிகளையும் பாதித்துள்ளது.
எனவே, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடத்தி வாக்கெடுப்பு நடததப்பட்டதன் பின்னர், இந்த ஆண்டு இறுதியளவில் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.

SHARE