வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை குறைக்க வேண்டும்!- சர்வதேச நாணய நிதியம்

190

இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிதியம் கூறியுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 5.2 அதிகரிப்பை காட்டிய அந்நிய செலாவணி கையிருப்பு, இம்முறை கடந்த கால நிலைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், இந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தின் எதிர்பார்த்த இலக்கை அடைவது இலகுவானதாக இருக்கும்.

உலக ரீதியாக ஏற்படும் பொருளாதார நிலைமைகள் குறித்து இலங்கை அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை மேலும் உருவாக்குவதன் மூலம் இலங்கை இந்த சிக்கலான நிலைமையில் இருந்து மீளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது

SHARE