வரவு செலவுத் திட்ட யோசனையில் சில திருத்தங்களை அறிவித்தார் பிரதமர்

317

கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் சில திருத்தங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் யோசனைகள் தொடர்பில் அரசியல்வாதிகளும் தொழிற்சங்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பிரதமர் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அண்மையில் இரண்டு கட்டங்களாக அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்தக் கொடுப்பனவில் இரண்டாயிரம் ரூபா அடிப்படைச் சம்ளத்துடன் சேர்க்கப்படும் எனவும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனப் புகைப் பரிசோதனைக் கட்டணம் 5000 ரூபாவிலிருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாவாக இடைக்கால அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருமான அனுமதிப் பத்திரக் கட்டணம் 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் முதல் தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் நிச்சயமாக 2500 ரூபாவினால் குறைந்தபட்சம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பிற்கான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE